தமிழ் செய்திகள்

Saturday, April 24, 2010

இன்டர்நெட்டில் பதற்றம் தரும் செய்திகள்



இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் அடிக்கடி சில போலியான செய்திகள், தகவல்கள் நம்மை அச்சுறுத்தி உடனே செயல்பட வைக்கும் வகையில் வருவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது.

இந்த செய்திகள் பலவகைப்படும். சில எடுத்துக் காட்டுக்களைப் பார்க்கலாம். இவை எல்லாமே பாப் அப் விண்டோக்களில் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குவதை அறியவில்லையா? வைரஸ் பாதித்துள்ளது.

ஒரு அப்டேட் செய்திட வேண்டும். ட்ரோஜன் அல்லது மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும், வைரஸ் நீக்கப்படும்.

இவற்றைப் படித்த நாம் அனைவருமே சிறிது கலவரப்படுவோம். உடனே செயல்பட்டு லிங்க்கில் கிளிக் செய்து வைரஸை இலவசமாக நீக்க முயற்சிக்க ஆசைப்படுவோம்.

இன்னும் சில செய்திகள், பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வந்தது போல் காட்டப்படும். அந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி தரப்பட்டிருக்கும். நிறுவனத்தின் முகவரி தானே, சரியாகத்தானே இருக்கும் என்று எண்ணி கிளிக் செய்திடுவோம்.

ஆனால் ஒரு சிறு எழுத்தை மாற்றி வேறு ஒரு வெப்சைட் செல்வோம். அங்கும் நிறுவனத்தின் வெப்சைட் சாயலில் வெப்சைட் காட்டப்பட்டு நாம் மாட்டிக் கொள்வோம்.

இது போன்ற செய்திகளை நம்பி நாம் செயல்படுகையில் நம் கம்ப்யூட்டரைக் கையகப்படுத்தும் வகையில் புரோகிராம்கள் பதியப்படலாம். பின் நம் பெர்சனல் தகவல்கள் அனைத்தும், அந்த புரோகிராமினை அனுப்பியவர்கள் கைகளுக்குச் சென்றுவிடும்.

அல்லது கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் வைரஸ்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது?

முதலில் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், லிங்க் ஆகத் தரப்பட்டிருக்கும் இடம் அருகே கர்சரைக் கொண்டு செல்ல வேண்டாம். எங்கும் கிளிக் செய்திட வேண்டாம். உடனே மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்க ஆரம்பிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தும் வழி எதுவும் திரையில் கிடைக்காது.

1. ஆல்ட் + எப்4 (Alt+F4) கீகளை சேர்த்து அழுத்தினால், இந்த எச்சரிக்கை செய்தி தரும் கட்டம் மறைந்துவிடும். அல்லது பிரவுசரே மறைந்துவிடலாம். பின் மீண்டும் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கி விடலாம்.

2. மேலே சொன்ன வழியின் மூலம், அந்த விண்டோவினை மூட இயலவில்லை என்றால், கண்ட்ரோல்+ ஆல்ட்+டெல் (Ctrl+Alt+Del) கீகளை அழுத்தி டாஸ்க் மேனேஜரைப் (Task Manager) பெறவும். இதில் அப்ளிகேஷன்ஸ் (Applications) டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.

3. இங்கு உங்கள் பிரவுசர் பெயர் பட்டியலில் இருக்கும். உடன் ஏதாவது புதியதாக ஒரு புரோகிராம் தெரிகிறதா என்று பார்க்கவும். இருந்தால் அதுதான் உங்களை ஏமாற்றும் புரோகிராம். அதனைத் தேர்ந்தெடுத்து என்ட் டாஸ்க் (End Task) பட்டனை அழுத்தி, அந்த புரோகிராமினை மூடவும். அப்படி ஒன்றும் இல்லை என்றால், பிரவுசர் புரோகிராமினை மூடவும்.

சில நடவடிக்கைகளை நாம் மறக்காமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.

எப்போதும் உங்கள் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை டவுண்லோட் செய்து, அவ்வப்போது இயக்கிப் பார்ப்பதுவும் நல்லது.

இதற்கென புரோகிராம் ஒன்றினை இணையத்தில் அண்மையில் காண நேர்ந்தது. அதன் பெயர்Malwarebytes AntiMalware. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இயக்கலாம்.

தரவிறக்கம் செய்ய


Sunday, April 18, 2010

ஐஸ்லாந்து நாட்டில்வெடித்துச் சிதறும் எரிமலையின் வீடியோ காட்சி (வீடியோ இணைப்பு)



ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை கடந்த 4 நாட்களாக வெடித்து சிதறி வருகிறது. அதில் இருந்து அதிக அளவில் புகை கிளம்பி வான மண்டலம் முழுவதும் சாம்பல் பரவி உள்ளது.

ஐஸ்லாந்து ஐரோப்பியா கண்டத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு. இங்கிருந்து பரவும் சாம்பல்கள் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதி முழுவதும் பரவி வருகிறது.

எனவே அந்த பாதைகளில் விமானங்கள் பறக்க முடியாத நிலை உள்ளது. எரிமலை சாம்பல் பரவியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறந்தால் அதில் உள்ள தூசுக்கள் விமான என்ஜின் மற்றும் கருவிகளுக்குள் புகுந்து விமானத்தையே இயங்க விடாமல் செய்துவிடும்.

இதனால் விமானங்கள் விபத்தை சந்திக்க நேரிடலாம். எனவே ஐரோப்பிய நாடுகளில் விமானங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன.

இங்கிலாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ரஷியா, பிரான்சு, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 20 ஐரோப்பிய நாடுகளில் விமா னங்கள் பறக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் இந்த நாடுகளில் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆசிய நாடுகளில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளின் வழியாகவே செல்லும். இந்த வழியாக செல்ல முடியாததால் அவையும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

சுமார் 22 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஐரோப்பிய விமானத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஆகிய நாடுகள்தான் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 80 சதவீத விமானங்கள் இயங்கவில்லை. இன்று இரவு 7 மணி வரை விமானங்களை இயக்கவேண்டாம் என்று விமானங்கள் கட்டுபாட்டு துறை கூறியுள்ளது.

இந்நிலையில் தினமும் 5 லட்சம் பேர் வரை விமான பயணம் செய்வார்கள். அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். உள்ளூர் பயணம் செய்பவர்கள் கார், ரெயில் மற்றும் படகு போக்குவரத்துகளை நாடியுள்ளனர்.
எரிமலை தொடர்ந்து புகைகளை கக்கியபடியே இருக்கிறது. இது இப்போது அமைதியடையும் வாய்ப்பே தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே இன்னும் சில நாட்கள் இதே நிலை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Thursday, April 15, 2010

ஐஸ்லாந்து எரிமலை வெடித்து வானம் புகை மயம் : ஐரோப்பாவில் விமான சேவைகள் ரத்து

ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை வெடித்ததில் கிளம்பிய படு பயங்கரமான சாம்பற்புகையால் வான்வெளி முழுதும் புகை மயமாக காட்சியளிக்கிறது. இதனால் பிரிட்டன் உள்ளிட்ட வடக்கு ஐரோப்பாவில் சுமார் 4000 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது

விமான எந்திரங்களில் கோளாறு ஏற்படும் என்பதால் பிரிட்டனுக்கு உள்ளேயும், வெளியேயும் வான்வெளியில் எந்த ஒரு விமானமும் சில மணி நேரங்களுக்கு பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

கணிக்க‌க் கூடிய நிலையில் அங்கு நிலவரம் இல்லை என்பதால் வான்வெளி எப்போது விமானப் போக்குவரத்திற்கு தயாராகும் என்பது பற்றி சரியான தகவல்கள் தற்போது வரை இல்லை.

இந்தப் புகை நார்வே, சுவீடன், ஃபின்லாந்து, டென்மார்க் ஆகிய நாடுகளின் வான்வெளியையும் விமானப் போக்குவரத்திற்கு லாயக்கற்றதாகியுள்ளது.

இந்த எரிமலை சாம்பற்புகையில் அடங்கியிருக்கும் பாறைகளின் துகள்கள், கண்ணாடி, மற்றும் மண் ஆகியவற்றால் விமான எந்திரம் நடுவானில் பழுதடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே இந்த எரிமலை வெடிப்பால் பனிமலை ஒன்று வேகமாக உருகி வருவதால் அப்பகுதியில் வாழ்ந்து வந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.

போக்குவரத்து நிறுத்தப்பட்ட விமான நிலையங்கள்:

ஆபர்தீன், எடின்பர்க், கிளாஸ்கோ விமான நிலையங்கள் மூடப்பட்டது.

லிவர்பூல் ஜான் லென்னான் விமான நிலையம், மான்செஸ்டர் மற்றும் நியூகாசில் விமான நிலையங்கள்.

பர்மிங்காம் விமான நிலையத்தில் கணிக்க முடியாத அளவுக்கு விமானங்கள் தாமதம். தவிரவும் ஈஸ்ட் மிட்லேன்ட், லீட்ஸ் பிராட்ஃபோர்ட், கார்டிப், பிரிஸ்டல் விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனில் உள்ள காட்விக், ஹீத்ரூ, மற்றும் சிட்டி விமான நிலையங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் பத்தாயிரக்கணக்கான பயணிகள் அவதி.

பிரிட்டனின் அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சாம்பற்புகை 55,000 அடி உயரத்திற்கு சென்றுள்ளது இது வடக்கு பிரிட்டன், மற்றும் ஸ்காட்லாந்து ஊடாகக் கடந்து செல்லும் என்று ஐரோப்பிய விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டகம் தெரிவித்துள்ளது.

ஆனால் வா‌னிலை மைய அதிகாரிகளோ, இந்தப் புகை மூட்டம் முழுதும் விலக சில நாட்கள் பிடிக்கும் என்று கூறுகின்றனர்.

ஏற்கனவே 1982ஆம் ஆண்டும், 1989ஆம் ஆண்டும் எரிமலை சாம்பற்புகையில் சிக்கிய இரு விமானங்களிலும் அதன் 4 எஞ்சின்களும் பழுதடைந்து பெருமாபாடு பட்டு தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tuesday, April 13, 2010

பறக்கும் தட்டை துரத்திய இங்கிலாந்து யுத்த விமானங்கள்

இங்கிலாந்தின் வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியில், (வேற்றுக்கிரக பறக்கும் தட்டினை ஒத்த) ஒரு விண்கலமொன்றினை இரண்டு யுத்த விமானங்கள் துரத்திச்சென்ற காட்சி, பொதுமக்களின் கமேராவில் பதிவாகியுள்ளது.

மிட்லாண்ட் Service Park இல் இருந்து, தொடர்ந்து 30 செக்கன்களுக்கு இக்காட்சிகள் படம்பிடிக்கப்பட்டுள்ளன.

வட்டவடிவில் மிகச் சிறியதாக காட்சியளிக்கும் இவ்விண்கலத்தினை இரண்டு அதிவேக ஜெட் வகை விமானங்கள் துரத்திப்பிடிக்கச் சென்ற இக்காட்சி அப்பிரதேச மக்களை பெரும் அச்சத்திற்குள்ளாக்கியிருக்கிறது.

ராடார் மூலம் இப்பறக்கும் தட்டு அவதானிக்கப்பட்டதும், உடனடியாக அதனை துரத்திச் செல்லும் முயற்சியில் இறங்கியதாம் இங்கிலாந்து விமானப்படை! எனினும் இம்முயற்சி வெற்றி அளித்ததா என மூச்சுக்காட்டவில்லை என்பது தான் ஏமாற்றம்!

முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நிக் போக், இது பற்றி தெரிவிக்கையில்,

நான் எனது வாழ்நாளில்,அவதானித்த ஒரு சிறந்த வானொளி காட்சி இது என்றார். எனினும் பாதுகாப்பு அமைச்சு, இன்னமும் இக்காட்சிகள் பற்றி கருத்தேதும் கூற முன்வரவில்லை எனது குறிப்பிடத்தக்கது.

Saturday, April 10, 2010

விமான விபத்தில் போலந்து அதிபர் உள்பட 132 பேர் பலி (படங்கள் இணைப்பு)

ரஷ்யாவில் போலந்து அதிபர் பயணம் செய்த விமானம் ஒன்று தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானதில், அதிலிருந்த 132 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவில் உள்ள மோலென்ஸ்க் நகரில், கத்யன் படுகொலை சம்பவத்தின் 70 ஆவது ஆண்டு நினைவு தினம் இன்று கடைப் பிடிக்கப்பட்டது.

இதில் கலந்து கொள்வதற்காக வாசா நகரில் இருந்து போலந்து அதிபர் லெக் கசின்ஸ்கி விமானத்தில் சென்றார். அவரது விமானம் மோலென்ஸ்க் நகர விமான நிலையத்தில் தரையிறங்கும்போது விபத்துக்குள்ளானது.

இதில் போலந்து அதிபர் லெச் காச்ஷின்ஸ்கி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட அந்த விமானத்தில் பயணம் செய்த 132 பேர் இருந்ததாகவும், மேற்கு ரஷ்யாவிலுள்ள ஸ்மோலென்ஸ்க் என்ற நகர் அருகே அந்த விமானம் விபத்துக்குள்ளானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் போலந்து அதிபரும், அவரது மனைவியும் இருந்ததை போலந்து அயலுறவுத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

இதனிடையே ரஷ்ய அரசின் பேச்சாளர் ஒருவரும் இந்த விபத்தை உறுதிபடுத்தியுள்ளார். ஆனால் விபத்து குறித்து மேலும் விவரங்களை தெரிவிக்க அவர் மறுத்துவிட்டார்.

இருப்பினும் விமானம் தரையிறங்கும்போது விமானத்தின் இடதுபுற இறக்கை மரம் ஒன்றின் மீது மோதியதில், விமானம் இரண்டு துண்டாக பிளந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானதாகவும், அடர்த்தியான பனி மூட்டம் காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என்றும் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குறைந்த அளவில் மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவே! : \'த ரைம்ஸ்\' நாளிதழ்


ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றபின் மிகக் குறைந்த அளவில் மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவே! : \'த ரைம்ஸ்\' நாளிதழ்


ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலே குறைந்த எண்ணிக்கையான மக்கள் வாக்களித்த தேர்தல் என்று பிரிட்டனில் இருந்து வெளி வரும் 'த ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அந்தப் பத்திரிகை தெரி வித்துள்ளதாவது:


ஸ்ரீலங்கா அரசு கடந்த வியாழன் நடை பெற்ற பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்வரும் 2017ஆம் ஆண்டு வரையிலும் ஆட்சி புரியும் அதிகாரத்தை அது பெற்றுள்ள போதும் குறைந்தளவு மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர்.


லண்டன் "சிற்றி' பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட மஹிந் தவின் மகன் நாமல் ராஜபக்ஷவும் நாடாளு மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட் டுள்ளார்.


225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் மஹிந்த அரசு 117 ஆசனங்களைப் பெற் றுள்ளது. விடுதலைப் புலிகள் முறியடிக் கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.


தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப் பட்ட போது மஹிந்த அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வில்லை. ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகளுக்கு மேல் வகிக்கக் கூடியதாக மாற்றியமைக்க அரசுக்கு இந்த பெரும் பான்மை அவசியம்.


எனினும் சுயேச்சையாகவும், எதிர்க் கட்சிகளுடனும் இணைந்து போட்டியிட்ட வர்களை அமைச்சர் பதவிகளை வழங்கி அரசு தனது பக்கம் இழுத்துக் கொள்ளலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டுவதற்கு எமக்கு 12 அல்லது 13 ஆசனங்கள் தேவை. ஆனால் அதனை பெறுவது ஒன்றும் கடினமானது அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


ஜெனரல் பொன்சேகாவைக் கைது செய்ததன் மூலம் ஆசியாவின் பழமைவாய்ந்த ஜனநாயகம் சர்வாதிகாரம் நோக்கிச் செல்கின்றது என்ற அச்சத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.


மேலும் ஸ்ரீலங்காவின் அதிகாரம் ஒரு குடும்பத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்த "டசின்' கணக்கான உறுப்பினர்கள் அரசின் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் உள்ளனர்.



கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் எவ்வளவு மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது தொடர்பில் தேர்தல் திணைக்களம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் 50தொடக்கம் 55விகிதமாக அது இருக்கும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.


1948ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிகக்குறைந்த அளவில் மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும் என அது மேலும் தெரிவித்துள்ளது.

Tuesday, April 6, 2010

சீனாவில் பிடிபட்ட விசித்திர விலங்கு

கீழை நாடுகளில் குறிப்பாக,​​ இந்தியாவின் இமயமலைப் பகுதியில் மனிதர்களின் கண்களுக்கே தெரியாமல் நடமாடுவதாகக் கருதப்படும் யெதி என்ற பிராணியைக் கைப்பற்றிவிட்டதாக சீனா தெரிவிக்கிறது.​ அது யெதிதானா என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

​இமயமலையில் யெதி என்கிற பனி மனிதன் உலவுவதாகவும்,​​ மிகப்பெரிய கால் தடங்களைக் கொண்டு அது யெதிதான் என்று தாங்கள் ஊகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு.​ அத்துடன் அந்த யெதியைப் பற்றிய கர்ண பரம்பரைக் கதைகளும் உலவுவதால் ஆராய்ச்சியாளர்கள் யெதியைத் தேடி அலைந்து கொண்டே இருக்கிறார்கள்.

இமயமலையில் மலையேறும் குழுக்களைச் சேர்ந்த சில வீரர்களும் விறகு வெட்டவோ,​​ தண்ணீர் எடுத்துவரவோ சென்ற கிராமவாசிகளும் யெதியைப் பார்த்திருக்கிறார்கள்.​ ஆனால் யெதி நடந்து செல்லும் வேகத்துக்குத் தங்களால் ஈடு கொடுக்க முடியாததால் பின் தொடர முடிந்ததில்லை என்றே தெரிவித்துள்ளனர்.​ யெதியின் காலடித்தடம் மிகப்பெரியது.​ எனவே அதன் உருவமும் மிகப் பெரியதாகவே இருக்க வேண்டும் என்று கருதுகின்றனர்.

இந்த நிலையில் மத்திய சீனாவில் சிசுவான் மாகாணத்தில் வினோதப் பிராணியை வேட்டைக்காரர்கள் கண்ணிவைத்து பிடித்திருக்கின்றனர்.​ ஆனால் அது யெதிதான் என்று உறுதியாக்கப்படவில்லை.

கரடியைபோன்ற உருவம் ஆனால் கரடியைப் போல ரோமங்கள் இல்லை,​​ கங்காரு போல வால் -​ ஆனால் கங்காருவைப் போல துள்ளிக் குதிக்கவில்லை,கரடியைப் போல கட்டைக் குரல் இல்லை,​​ பூனையைப் போன்ற மென்மையான குரல் ஆகியவற்றுடன் இருக்கிறது இந்த வினோதப் பிராணி.​ பிடிபட்டது முதலே விடாமல் கத்திக் கொண்டிருக்கிறது.​ அது தன் இனத்தாரை துணைக்கு அழைப்பதைப் போலத் தெரிகிறது.​ ஆனால் அதன் இனத்தைச் சேர்ந்த இன்னொரு பிராணி எதுவும் அது வைக்கப்பட்டுள்ள கூண்டுக்கு வரவேயில்லை.​ மரங்கள் அடர்ந்த காட்டுப் பகுதியில் இது பிடிபட்டது.​ கரடியைப் போல உருவம் என்பதால் தூரத்திலிருந்து பார்க்க மனிதனைப் போன்றே தெரிந்தது.​ ஆனால் அது மூர்க்கத்தனமாக எதையும் செய்யவில்லை.

இப்போது அந்தப் பிராணியை பெய்ஜிங்கில் உயர் ஆராய்ச்சியாளர்களின் பார்வைக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.​ விரைவில் மேல் விவரங்கள் தெரியக்கூடும்.