தமிழ் செய்திகள்

Sunday, April 18, 2010

ஐஸ்லாந்து நாட்டில்வெடித்துச் சிதறும் எரிமலையின் வீடியோ காட்சி (வீடியோ இணைப்பு)



ஐஸ்லாந்து நாட்டில் உள்ள எரிமலை கடந்த 4 நாட்களாக வெடித்து சிதறி வருகிறது. அதில் இருந்து அதிக அளவில் புகை கிளம்பி வான மண்டலம் முழுவதும் சாம்பல் பரவி உள்ளது.

ஐஸ்லாந்து ஐரோப்பியா கண்டத்தில் வடமேற்கு பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு. இங்கிருந்து பரவும் சாம்பல்கள் கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதி முழுவதும் பரவி வருகிறது.

எனவே அந்த பாதைகளில் விமானங்கள் பறக்க முடியாத நிலை உள்ளது. எரிமலை சாம்பல் பரவியுள்ள பகுதிகளில் விமானங்கள் பறந்தால் அதில் உள்ள தூசுக்கள் விமான என்ஜின் மற்றும் கருவிகளுக்குள் புகுந்து விமானத்தையே இயங்க விடாமல் செய்துவிடும்.

இதனால் விமானங்கள் விபத்தை சந்திக்க நேரிடலாம். எனவே ஐரோப்பிய நாடுகளில் விமானங்கள் போக்குவரத்து நிறுத்தப்பட்டு உள்ளன.

இங்கிலாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து, ஜெர்மனி, போலந்து, ரஷியா, பிரான்சு, பெல்ஜியம், சுவிட்சர்லாந்து, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட 20 ஐரோப்பிய நாடுகளில் விமா னங்கள் பறக்க முடியாத நிலை உள்ளது.

இதனால் இந்த நாடுகளில் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுவிட்டன. ஆசிய நாடுகளில் இருந்து அமெரிக்க நாடுகளுக்கு செல்லும் விமானங்கள் பெரும்பாலும் ஐரோப்பிய நாடுகளின் வழியாகவே செல்லும். இந்த வழியாக செல்ல முடியாததால் அவையும் ரத்து செய்யப்பட்டுவிட்டன.

சுமார் 22 ஆயிரம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுவிட்டதாக ஐரோப்பிய விமானத்துறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதில் இங்கிலாந்து, பிரான்சு, ஜெர்மனி, ஆகிய நாடுகள்தான் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு 80 சதவீத விமானங்கள் இயங்கவில்லை. இன்று இரவு 7 மணி வரை விமானங்களை இயக்கவேண்டாம் என்று விமானங்கள் கட்டுபாட்டு துறை கூறியுள்ளது.

இந்நிலையில் தினமும் 5 லட்சம் பேர் வரை விமான பயணம் செய்வார்கள். அவர்கள் எங்கும் செல்ல முடியாமல் முடங்கி கிடக்கின்றனர். உள்ளூர் பயணம் செய்பவர்கள் கார், ரெயில் மற்றும் படகு போக்குவரத்துகளை நாடியுள்ளனர்.
எரிமலை தொடர்ந்து புகைகளை கக்கியபடியே இருக்கிறது. இது இப்போது அமைதியடையும் வாய்ப்பே தெரியவில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். எனவே இன்னும் சில நாட்கள் இதே நிலை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment