தமிழ் செய்திகள்

Saturday, May 22, 2010

விமான விபத்தில் 158 பேர் பலி

கர்நாடகத்தில் விமான விபத்தில் 158 பேர் பலி




துபாயிலிருந்து மங்களூர் வந்த விமானம் தரையிறங்கிய சமயத்தில், வேகமாக ஓடி ஓடுதளத்தை விட்டு விலகி தீப்பிடித்துக் கொண்டதில் வெடித்துச் சிதறியது. இதில் விமானத்தில் இருந்த 158 பேர் உயிரிழந்தனர். 8 பேர் படுகாயங்களுடன் மீ்ட்கப்பட்டனர்.
இன்று காலை ஆறரை மணியளவில் இந்த கோரச் சம்பவம் நடந்தது.

விமான விபத்து குறித்து ஏர் இந்தியா நிறுவன மும்பை பிராந்திய இயக்குநர் அனுப் ஸ்ரீவத்சவா செய்தியாளர்களிடம் பேசுகையில்,

விபத்துக்குள்ளான அந்த போயிங் 737 விமானம் இன்று அதிகாலை 1.15மணிக்கு துபாயிலிருந்து கிளம்பி மங்களூர் வந்தது.

காலை 6.03 மணியளவில் விமானம் தரையிறங்கியது. அப்போது எதிர்பாராதவிதமாக ரன்வேயில் வேகமாக ஓடிய விமானம், ரன்வேயை விட்டு விலகி ஓடி விபத்துக்குள்ளானது.

இதில் விமானம் வெடித்துச் சிதறியது. விபத்தில் சிக்கியவர்களில் 8 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர். விமானத்தில் 4 குழந்தைகள் உள்பட 158 பயணிகளும், 6 ஊழியர்களும் இருந்தனர்.

விபத்துக்கான காரணம் குறித்து தற்போது தெரியவில்லை. பல்வேறு தகவல்களை எதிர்பார்க்கிறோம் என்று தெரிவித்தார்.

ரன்வேயில் அது இறங்கியபோது படு வேகமாக விமானம் சென்றதால் அதில் தீப்பிடித்துக் கொண்டது. சில விநாடிகளில் விமானம் வெடித்துச் சிதறியது.

போதிய வெளிச்சமில்லாத நிலையில் விமானத்தை தரையிறக்கியதே விபத்து க்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த சமயத்தில் வானிலை நன்றாகவே இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதேசமயம், விமானியின் தவறே இதற்குக் காரணம் என்றும் முதல் கட்டத் தகவல்கள் கூறுகின்றன. பைலட் செர்பியாவைச் சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. இணை பைலட் இந்தியாவைச் சேர்ந்தவர் ஆவார்.

Wednesday, May 19, 2010

இலங்கையில் இயற்கை அனர்த்தத்தால் 14 பேர் பலி; நான்கு லட்சம் பேர் பாதிப்பு

இலங்கையில் மழையுடன் கூடிய வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமான
 இதுவரை 14 போ் பலியாகியுள்ளதுடன், சுமார் நான்கு லட்சம் போ் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த தகவலை தேசிய அனர்த்த முகாமைத்துவ அமைச்சு வெளியிட்டுள்ளது.

பலயாகியுள்ள 14 பேரில் 7 பேர் கம்பஹா மாவட்டத்தை சேர்த்தவர்கள் என
தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் இன்றும் கடும் மழை ஆங்காங்கே பெய்து வருகிறது

Followers