தமிழ் செய்திகள்

Sunday, May 1, 2011

ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொலை


ஒசாமா பின்லேடன் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஓபரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

Friday, April 29, 2011

சுவிஸ் வங்கி கணக்கு; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு

: விக்கிலீக்ஸ் நிறுவனர்

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களையும் கண்டேன். விரைவில் அந்த பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவோம். கறுப்புப் பண விவகாரத்தில் இந்திய அரசு மெத்தனமாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஜெர்மன் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் ஜெர்மன் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. எனினும், ஜெர்மனை விட இந்தியர்களின் பணமே சுவிஸ் வங்கிகளில் அதிகமாக பதுக்கப்பட்டுள்ளது." என்று அசாஞ்ஜே கூறியுள்ளார்.

ஜுலியன் அசாஞ்ஜேவின் தகவலால், சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

Saturday, August 21, 2010

போலி சாமியார் வரிசையில் சாய் பாபா (வீடியோ இணைப்பு)






போலி சாமியார் வரிசையில் சாய் பாபா இந்தியாவில் போலி சாமியார்கள் தமது சுகபோக வாழ்க்கைக்காக அப்பாவி மக்களை சில தந்திரோபயங்களை பயன்படுத்தி ஏமாற்றுவது சகஜமாகிவிட்டது. மக்களும் அதை நம்பி தமது பணங்களை விரயம் செய்கின்றனர்.

பூமியில் கடவுளுக்கு நிகரானவர்கள் யாரும் இல்லை.என்பதை மக்கள் நன்றாக உணர வேண்டும்.கடவுள் என்ற ஒரு சக்தி உருவம் அற்ற நிலையில்இருபது உண்மை.

நாம் எம்மை நாமே தூய்மை படுத்துவதன் மூலம் அந்த சக்தியின் பயன்பாட்டை உணரமுடியுமே தவிர காண முடியாது என்பதுதான் உண்மை.

குறிப்பாக ஆசியா நாடுகளில் இவ்வாறான போலி சாமியர்களினால் மக்களின் பணம் மற்றும் நேரங்கள் வீணடிக்க படுகின்றமை கவலைக்குரிய விடயமாகும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சி அவசியம்.போலி சாமியார்களின் அரசியல் செல்வாக்கினால் அவர்கள் தண்டிக்கபடுவதில்லை.

வீடியோ இதற்க்கு நல்ல உதாரணமாக அமைகின்றது

Tuesday, August 3, 2010

பிரித்தானியாவில் இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் : சாயீதா வார்சி



பிரித்தானியாவில் உள்ள இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிவது எந்த வகையிலும் அவர்களின் சுதந்திரத்தை பாதிக்காது. எனவே இஸ்லாமிய பெண்கள் பர்தா அணிய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார் முதல் முஸ்லிம் காபினெட் அமைச்சரான வார்சி.

பர்தா முகத்தை மூடும் படியான ஆடையாக இருப்பதாலும் ஆண்கள் கட்டுப்படுத்துவதாலேயே இஸ்லாமிய பெண்கள் அதனை அணிகின்றனர் என கடந்த மாதம் வாக்கெடுப்பு ஒன்று நடத்தப்பட்டதில் பெரும்பான்மையானோர் அதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இதனால் பெல்ஜியம் , பிரான்ஸ் நாடுகளை தொடர்ந்து பிரித்தானியாவிலும் பொது இடங்களில் பர்தா அணிய தடை வரக் கூடும் என்ற சர்ச்சை நிலவி வந்தது. பின்னர் குடிவரவுத் துறை அமைச்சர் டேமியன் கிரீன் பிரித்தானியாவில் பர்தா அணிய தடை விதிக்கப்படாது என அறிவித்ததன் மூலம் அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ஆண்கள் கட்டாயத்தின் பேரில் மட்டும் பெண்கள் பர்தா அணிவதில்லை. பல இஸ்லாமிய பெண்கள் பர்தாவை விரும்பியே அணிகின்றனர். எனவே பர்தா அணிய தடை விதிக்கக் கூடாது என்று இஸ்லாமிய அமைச்சர் ஒருவரே தற்போது நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் மீண்டும் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

Monday, August 2, 2010

மீண்டும் ஆக்கிரமிக்கும் 'இன்டர்நெற் எக்ஸ்புளோரர்'



பிரபல கணனி இயங்குதளமான மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' உலகளாவியரீதியில் அதிகமாக உபயோகிக்கப்படும் கணனி இயங்குதளமாக மீண்டும் தன்னை நிரூபித்துள்ளது.

தற்போதைய சந்தை நிலவரப்படி மற்றைய முன்னணி இயங்குதளங்களான ' மொஸிலா பயர் பொக்ஸ் ' மற்றும் ' கூகுள் குரோம் ' ஆகியவற்றை ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' பின்தள்ளியுள்ளது.

மேலும் உலகில் வேகமாக வளர்ந்துவரும் இயங்குதளமாக மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' தொகுப்பு விளங்குகின்றது.

புதிய இணைய அறிக்கைகளின் படி மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் ' இன் இயங்குதள சந்தைப்பங்கு ஜூலை மாதமளவில் 0.42 % வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி இயங்குதள சந்தையில் அதன் மொத்த பங்கு 60.74% வீதமாகவுள்ளது.

அதற்கு அடுத்த இடங்களிலுள்ள ' பயர்பொக்ஸ் ' மற்றும் ' கூகுள்குரோம் ' இயங்குதளங்களின் சந்தைப்பங்குகள் முறையே 0.9% மற்றும் 0.08% வீதங்களால் வீழ்ச்சியடைந்துள்ளது.

இந் நிலையில் அப்பிளின் ' சபாரி ' இயங்குதளத்தின் சந்தைப்பங்கு 0.24% வீதத்தினால் அதிகரித்துள்ளது.

அனைவரும் எதிர்ப்பார்க்காதவகையில் ' இன்டர்நெற் எக்ஸ்புளோரர் 8 ' இயங்குதளத்தின் உலகளாவிய பாவணை 0.98% வீதத்தினால் அதிகரித்துள்ளதோடு இதன் மொத்த உலகளாவிய பாவணைவீதம் 30% உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Sunday, August 1, 2010

பான் கீ மூனின் நிபுணர் குழு தமது உத்தியோகபூர்வ அமர்வுகளை ஆரம்பிக்கிறது



ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இலங்கையின் போர் குற்றம் தொடர்பில் அமைத்துள்ள நிபுணர் குழு, தமது உத்தியோகபூர்வ அமர்வுகளை ஆகஸ்ட் மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் நடத்தவுள்ளது.

பான் கீ மூனின் உதவி பேச்சாளர் சௌங்கா சொய் இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், நிபுணர் குழு தமது பணிகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்த பின்னர் இலங்கை அதிகாரிகளுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

2009 ஆம் ஆண்டு இலங்கையின் வன்னியில் இடம்பெற்ற போர்க்குற்றம் உட்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பான் கீ மூனுக்கு ஆலோசனை வழங்கவே இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த நிபுணர் குழு மனித உரிமை மீறல்கள் குறித்து எந்த விடயங்கள் குறித்து விசாரணை நடத்தவுள்ளதாக பேச்சாளரிடம் கேட்டபோது அவர் அதனைக் கூற மறுத்துவிட்டார்.

எனினும் தமது பணிகளுக்கு இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பை எதிர்ப்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிபுணர் குழுவின் இறுதி அறிக்கை பான் கீ மூனிடம் சமர்ப்பிக்கப்படும் என குறிப்பிட்ட பேச்சாளர் சொய், இலங்கை அரசாங்கம் தமது விசாரணைகளுக்காக இந்த அறிக்கையின் பரிந்துரைகள் தேவையென கருதுமானால் அதற்கும் இறுதியறிக்கை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Wednesday, July 21, 2010

ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்பு



இலங்கையில் கடந்த ஆண்டு தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐ.நா.நிபுணர் குழு தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

அதே நேரத்தில் சூடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கறுப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது.

அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம்.

அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது வெளிப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்த வழக்கு நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சவின் போர்க்குற்ற விசாரணை வழக்கில் ஆஜராகி உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்’’ என்று தெரிவித்தார்.