ஸ்ரீலங்கா சுதந்திரம் பெற்றபின் மிகக் குறைந்த அளவில் மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவே! : \'த ரைம்ஸ்\' நாளிதழ்
ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் கடந்த வாரம் நடைபெற்ற பொதுத் தேர்தலே குறைந்த எண்ணிக்கையான மக்கள் வாக்களித்த தேர்தல் என்று பிரிட்டனில் இருந்து வெளி வரும் 'த ரைம்ஸ்' நாளேடு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்தப் பத்திரிகை தெரி வித்துள்ளதாவது:
ஸ்ரீலங்கா அரசு கடந்த வியாழன் நடை பெற்ற பொதுத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுள்ளது. எதிர்வரும் 2017ஆம் ஆண்டு வரையிலும் ஆட்சி புரியும் அதிகாரத்தை அது பெற்றுள்ள போதும் குறைந்தளவு மக்களே தேர்தலில் வாக்களித்துள்ளனர்.
லண்டன் "சிற்றி' பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்துக் கொண்ட மஹிந் தவின் மகன் நாமல் ராஜபக்ஷவும் நாடாளு மன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட் டுள்ளார்.
225 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் மஹிந்த அரசு 117 ஆசனங்களைப் பெற் றுள்ளது. விடுதலைப் புலிகள் முறியடிக் கப்பட்ட பின்னர் நடைபெற்ற முதலாவது பொதுத் தேர்தல் இதுவாகும்.
தேர்தலின் இறுதி முடிவு அறிவிக்கப் பட்ட போது மஹிந்த அரசு மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற வில்லை. ஜனாதிபதி பதவியை இரண்டு தடவைகளுக்கு மேல் வகிக்கக் கூடியதாக மாற்றியமைக்க அரசுக்கு இந்த பெரும் பான்மை அவசியம்.
எனினும் சுயேச்சையாகவும், எதிர்க் கட்சிகளுடனும் இணைந்து போட்டியிட்ட வர்களை அமைச்சர் பதவிகளை வழங்கி அரசு தனது பக்கம் இழுத்துக் கொள்ளலாம். மூன்றில் இரண்டு பெரும்பான்மையை எட்டுவதற்கு எமக்கு 12 அல்லது 13 ஆசனங்கள் தேவை. ஆனால் அதனை பெறுவது ஒன்றும் கடினமானது அல்ல என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ஜெனரல் பொன்சேகாவைக் கைது செய்ததன் மூலம் ஆசியாவின் பழமைவாய்ந்த ஜனநாயகம் சர்வாதிகாரம் நோக்கிச் செல்கின்றது என்ற அச்சத்தை ஸ்ரீலங்கா ஜனாதிபதி ஏற்படுத்தியுள்ளார்.
மேலும் ஸ்ரீலங்காவின் அதிகாரம் ஒரு குடும்பத்திற்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அவரின் குடும்பத்தைச் சேர்ந்த "டசின்' கணக்கான உறுப்பினர்கள் அரசின் அமைச்சர்களாகவும், அதிகாரிகளாகவும் உள்ளனர்.
கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற தேர்தலில் எவ்வளவு மக்கள் வாக்களித்துள்ளனர் என்பது தொடர்பில் தேர்தல் திணைக்களம் எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால் 50தொடக்கம் 55விகிதமாக அது இருக்கும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
1948ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா சுதந்திரம் அடைந்த பின்னர் நடைபெற்ற தேர்தல்களில் மிகக்குறைந்த அளவில் மக்கள் வாக்களித்த தேர்தல் இதுவாகும் என அது மேலும் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment