தமிழ் செய்திகள்

Sunday, May 1, 2011

ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையினரால் கொலை


ஒசாமா பின்லேடன் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி இருந்த போது அமெரிக்க உளவுப்படையினரின் அதிரடி ஓபரேஷன் திட்டத்தில் குறி வைத்து காலி செய்யப்பட்டான். அமெரிக்காவின் நீண்டகால ஆசையும், முக்கிய நோக்கமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இவரது பலி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் ஒபாமா தொலைக்காட்சியில் தோன்றி அறிவித்தார்.

Friday, April 29, 2011

சுவிஸ் வங்கி கணக்கு; இந்தியர்களின் பெயர் விரைவில் வெளியீடு

: விக்கிலீக்ஸ் நிறுவனர்

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை முதலீடு செய்துள்ள இந்தியர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும் என்று விக்கிலீக்ஸ் இணையதளத்தின் நிறுவனர் ஜுலியன் அசாஞ்ஜே கூறியுள்ளார்.
இந்தியாவைச் சேர்ந்த ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் இன்று அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணத்தை ரகசியமாக முதலீடு செய்துள்ளவர்களின் பட்டியலில் இந்தியர்களின் பெயர்களையும் கண்டேன். விரைவில் அந்த பட்டியலை இணையதளத்தில் வெளியிடுவோம். கறுப்புப் பண விவகாரத்தில் இந்திய அரசு மெத்தனமாக உள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் ஜெர்மன் அரசு தீவிரம் காட்டி வருகிறது. வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணத்தை மீட்பதில் ஜெர்மன் முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது. எனினும், ஜெர்மனை விட இந்தியர்களின் பணமே சுவிஸ் வங்கிகளில் அதிகமாக பதுக்கப்பட்டுள்ளது." என்று அசாஞ்ஜே கூறியுள்ளார்.

ஜுலியன் அசாஞ்ஜேவின் தகவலால், சுவிஸ் வங்கிகளில் ரகசிய கணக்கு வைத்துள்ள இந்தியாவைச் சேர்ந்த அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் கலக்கமடைந்துள்ளனர்.