தமிழ் செய்திகள்

Wednesday, July 21, 2010

ராஜபக்சவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணையில் ஆஜராக தயார்: உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் அறிவிப்பு



இலங்கையில் கடந்த ஆண்டு தமிழர்களை கொன்றுகுவித்த ராஜபக்ச அரசு மீதான போர்க்குற்ற விசாரணையை நியூயார்க்கில் நேற்று ஐ.நா.நிபுணர் குழு தொடங்கியது. இக்குழுவிற்கு உதவுவதற்காக ஐநா மனித உரிமை ஆணையம் துணைக்குழு ஒன்றையும் அமைத்துள்ளது.

அதே நேரத்தில் சூடான் அதிபர் அல் பஷீர் போர்க்குற்றங்களை விசாரித்த உலக குற்றவியல் நீதிமன்றம், கறுப்பின பழங்குடி மக்களை கொன்று குவித்ததற்கு அவரை கைது செய்ய ஆணையிட்டது.

அதிபர் அல் பஷீர் வழக்கு தொடர்பாக உலகப்புகழ் பெற்ற வழக்கறிஞர் லூயிஸ் மொரீனோ அக்காம்போ, ‘’போர்க்குற்ற உண்மையை வெளியில் கொண்டு வந்துள்ளோம்.

அதிபர் அல் பஷீர் மறைக்க முயன்ற உண்மைகள் தற்போது வெளிப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பாக கொலை மிரட்டல்கள் வந்தன. ஆனால் அவற்றை பொருட்படுத்தாது இந்த வழக்கு நடத்தப்பட்டது’’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும், ‘’ஐநா கேட்டுக்கொண்டால் இலங்கை அதிபர் ராஜபக்சவின் போர்க்குற்ற விசாரணை வழக்கில் ஆஜராகி உண்மைகளை வெளிக்கொண்டுவர தயார்’’ என்று தெரிவித்தார்.

Tuesday, July 13, 2010

மைக்ரோ சொஃப்ட் நிறுவனத்தின் புதிய வெளியீடு



மைக்ரோ சொஃப்ட்(microsoft) நிறுவனம் தனது புதிய உற்பத்தி தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளது. தனது விண்டோஸ் 7(windows) இயங்கு தளத்தை கொண்டு இயங்கும் tablet pc க்கள் இந்த வருடத்தில் வெளிவரும் என்று தெரிவித்துள்ளது.

இது ஸ்மார்ட்(smart) சாதன பாவனையாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.இது தொடர்பான அறிவிப்பை தனது வியாபார பங்காளர்களுடன் இடம்பெற்ற மகாநாட்டில் வெளியிட்டிருந்தது. இங்கு Hp, Asus, Dell, Samsung, Toshiba, and Sony போன்ற நிறுவனங்கள் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Apple நிறுவனத்தின் ipad வெளியாகி 80 நாட்களுக்குள் 3 மில்லியன் விற்றுத்தீர்ந்த நிலையில் இந்த அறிவிப்பானது மிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Friday, July 9, 2010

கணினிகளுக்கு தீங்கு விளைக்கும் 6 வித வைரஸ்கள்

கணினிகளைத் தாக்க நாள்தோறும் பல்லாயிறக்கணக்கான வைரஸ்கள் உருவாக்கப்படுகின்றன. அவற்றை பண்புவாரியாக பிரித்துப் போட்டுப் பார்த்தால், மொத்தமாக 6 வகைகள் தேறும். அவை என்ன என்ன? எப்படிப் பட்டவை?

1. Boot Sector Viruses:

அதாவது, பூட் செக்டார் வைரஸ் என்பது, நமது கணினியின் BIOS என சொல்லிப்படும் "அடிப்படை உள்ளீட்டு அல்லது வெளியீட்டு முறை" எனும் சிஸ்டம் மீது தான் தாக்குகின்றன. பொதுவாக வைரஸ் வந்ததை உண்ர்ந்தால் உடனே இயங்குதள நிறுவி குறுந்தகட்டை தேடி எடுத்து, மறு நிறுவல் செய்து விடுவோம். அப்படி எல்லாம் செய்தால் இந்த பூட் செக்டார் வைரஸை அசைத்துக் கூடப் பார்க்க முடியாது. நீங்கள் புதியதாக ஒரு HDD வாங்கி வந்து வைத்தாலும் சரி, அதுவும் பாதிக்கப்படும். காரணம் இது தாக்குவது பாதிப்பது எல்லாம் MBR (MBR என்றால் Master Boot Record ஆகும். இது இயங்குதளத்தை கண்டுபிடித்து இயங்க வகை செய்யும்) எனும் தகவலைச் சேமித்துவைத்திருக்கும் BIOS-இன் பகுதியைத் தான். அதனால் BIOS ரெகவரி டிஸ்க் ஒன்று உருவாக்கி BIOS-ஐ மீள்-நிறுவல் செய்து, HDD-இனையும் அழித்து, இயங்குதளம் மீள்-நிறுவல் செய்து தான் கணினியைக் காப்பாற்ற முடியும்.

2. கூடாத நிரல் அல்லது கோப்புகள்:

இந்த வகை வைரஸ்கள், நிரல்களாகவோ அல்லது கோப்பாகவோ ஹார்ட் டிஸ்கில் இயங்குதளத்தின் பார்ட்டீசனில் உட்கார்ந்துக் கொள்ளும். இவை, இயங்குதளம் தொடங்கும் போதே, தானும் தொடங்கி தன் கூடாத செய்கையினால் கணினியை பாதிப்புக்குள்ளாக்கும். அந்த நிரல்/கோப்பு எதுவென்று தெரிந்தாலே, Task Manager கொண்டு நிறுத்திவிடலாம். பின்னர், அழித்தும் விடலாம்.

3. Stealthy Virus:

இவையும் இரண்டாவதாக சொல்லப்பட்ட வைரஸ் போலத் தான். ஆனால், இந்த வகை வைரஸ்கள் தனது அடையாளத்தைக் காட்டிக் கொள்வதே இல்லை. இதனால், இதனைக் கண்டுபிடித்து முடக்க/அழிக்க மிகவும் கடினமானதும் கூட. Anti-Virus இருக்கிறதே என தப்புக் கணக்குப் போடாதீர். வேட்டியாடும் Anti-Virus-களிடம் தான் இதன் விளையாட்டே. நீங்கள் வைரஸ் ஸ்கேன் செய்யத் தொடங்கியவுடன் தனது கோப்பிற்கு, ஒரு நல்ல நிரல் என்ற பிம்பத்தை உருவாக்கிவிட்டுத் தானே தற்காலிகமாக முடங்கிக்கொள்ளும். இதனால், Anti-virus-களிடம் இது அகப்படாது தப்பித்துவிடும்.

4. MultiPartite:

இந்த வகை வைரஸ்கள் மேலே சொல்லப்பட்ட மூன்று வகையிலும் சார்ந்தவை. இதனால், இது பாதிக்காத இடமே கணினியில் இருக்காது. இவ்வாறான வைரஸ்கள் பெரும்பாலும் தாக்குவது குறைவாக இருந்தாலும், தாக்கப்பட்டால் பெரும்பாதிப்பு உண்டாகும்.

5. Polymorphic:

பாலிமார்பிக் வைரஸ்கள், தங்களைத் தாங்களே திருத்தி எழுதிக்கொள்ளும் வல்லமைக் கொண்டவை. இதனால் வைரஸ் ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு ஸ்பைவேராகவும், ஸ்பைவேருக்கு ஸ்கேன் செய்யும் போது தன்னை ஒரு வைரஸாகவும் மாற்றிக் கொண்டு பாதிப்பை உண்டாக்கிய வன்னம் இருக்கும்.

6. Macro

மேக்ரோ என்பது, சொல் திருத்திகளில் அடிக்கடி செய்ய வேண்டி இருக்கும் ஒரு பணியை தானே செய்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்படும் நிரலாக்கம் தான். அதையே தீங்கிழைக்கும் ஒரு பணியை இயக்க நிரலாக்கப் படுவது தான் மேக்ரோ வகை வைரஸ்கள். பெரும்பாலும், நமது மின்னஞ்சல் முகவரியில் இருந்து எல்லோருக்கும் மெயில் அனுப்புவது போன்ற சிறு சிறு தொந்தரவு தரும்.

Monday, July 5, 2010

விண்டோஸ் 7 : உலகில் அதிகமாக பயன்படுத்தும் இயங்குதளம்?!


விண்டோஸ் 7 இயங்குதளம் (Operating System) கடந்த அக்டோபர் 22 2009 அன்று வெளியிடப்பட்டது. விண்டோஸ் 7 வெளியிடப்பட்ட 6 மாதங்களில் உலகத்தில் 10 ல் ஒரு கணினியில் பயன்படுத்தும் இயங்குதளமாக மாறியுள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

இயங்குதள வரலாற்றில், விண்டோஸ் 7 தான் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்ட மற்றும் செய்யபட போகும் இயங்குதளமாக இருக்கும் என மைக்ரோசாப்ட் நிறுவனம் கருதுகிறது.

மைக்ரோசாப்ட் கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட்ட அறிக்கையில், $14.5 bn மார்ச் 31 வரையுள்ள காலாண்டிற்கான வருவாயாக தெரிவித்திருக்கிறது. மேலும் அந்நிறுவன தலைமை கணக்கு அலுவலர் (CFO) Peter Klein “continues to be a growth engine” என்றும் கூறியுள்ளார்.

பெரும்பாலான முன்னணி கணினி நிறுவனங்கள் விண்டோஸ் 7 ஐ தங்கள் கணினிகளுக்கு இயங்கு தளமாக்க (OS) திட்டமிட்டுள்ளனர்.

விண்டோஸ் 7 இதற்கு முந்தய version விஸ்டாவை விட மிகவும் எளிதாக மற்றும் வேகமாக இயங்கும் தளமாக (OS) இருப்பதே இதன் வளர்ச்சிக்கு காரணமாக இருக்கலாம்.