தமிழ் செய்திகள்

Friday, March 12, 2010

ஐ.நா விசாரணைகளுக்கு இலங்கை அனுமதியளிக்க வேண்டும்: பிரதமர் ரட்ணசிறி

ஐக்கிய நாடுகள் அமைப்பின் விசாரணைகளுக்கு
இலங்கை முதலில் அனுமதியளிக்க வேண்டுமென
பிரதமர் ரட்ணசிறி விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியின்றி
விசாரணைகளை நடத்த முடியாது என அவர்
சுட்டிக்காட்டியுள்ளார்.ஐக்கிய நாடுகளின் செயலாளர்
நாயகம் பான் கீ மூன், இலங்கை தொடர்பாக நிபுணர்கள்
குழுவொன்றை நியமிப்பதற்கு சிலரின் நடவடிக்கைகளே
காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். பொரளையில்
நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில்
கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர்
இதனைத் தெரிவித்துள்ளார்.